×

3 கதை, ஒரு கிளைமாக்ஸ் கதையில் விதார்த், ஜனனி

சென்னை: தமிழில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் செய்திருக்கும் குவியம் ஸ்டுடியோஸ், தற்போது குவியம் பிலிம்ஸ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரித்து இசை அமைக்கும் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிருத்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஷ், மகா நடிக்கின்றனர்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘நாம் செய்த தவறு எந்தக்காலத்திலும் நம்மை விடாமல், ஏதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேர்ந்தே தீரும் என்ற இக்கதைக்கு ஹைபர்-லிங்க் நான்-லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்துள்ளேன். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய 3 கதைகளாக திரைக்கதை நகர்ந்து, இறுதியில் ஒரே புள்ளியில் முடியும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஒரேகட்டமாக நடந்து முடிகிறது’ என்றார்.

The post 3 கதை, ஒரு கிளைமாக்ஸ் கதையில் விதார்த், ஜனனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vidharth ,Janani ,CHENNAI ,Kuviam Studios ,Kuviam Films ,Lalgudi M. Hariharan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வேற மாறி ஆபீஸ் 2வது பாகம் உருவாகிறது