×

வீங்கிய முகத்துடன் போட்டோ நடிகை உர்பி தாக்கப்பட்டாரா? நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

மும்பை: பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவேத். இவர் பொது நிகழ்ச்சிகளில் ஆபாசமாக உடை அணிந்துதான் வருவார். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் தனது முகம் திடீரென வீங்கிவிட்டதாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதனால் சில நாட்களாக வெளியிடங்களுக்கு செல்வதில்லை என்றும் அவர் கூறிப்பிட்டார்.

தன்னுடைய முகம் குறித்து பலரும் பல விஷயங்களை பேசிவருவதாகவும். ஆனால் இது தனக்கு அவ்வப்போது இயல்பாக ஏற்படும் அலர்ஜிகள் தான் என்றும் கூறியுள்ளார். 18 வயது முதலிலேயே தனது முகத்தில் Botox மற்றும் பிற அழகு சாதன விஷயங்களை பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது இது போன்ற முக வீக்கங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி கருத்து கூறிய நெட்டிசன்கள், ‘அவ்வப்போது இப்படி நடக்கும் என்கிறீர்கள்.

ஆனால் இப்போதுதான் முதல்முறையாக இதுபோன்ற நிலையில் உங்கள் முகத்தை பார்க்கிறோம். உண்மையை சொல்லுங்கள், யார் உங்களை தாக்கியது?’ என ஒருவர் கேட்டிருக்கிறார். ‘முகம் வீங்கியதற்கு நீங்கள் சாக்குபோக்கு சொல்லலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது’ என்றும், ‘தொடர்ந்து ஆபாசத்தை பரப்பியதால் கிடைத்த பரிசாக இது இருக்குமோ’ என்றும் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். இதனால் உர்பி ஜாவேத் அப்செட்டில் இருக்கிறார்.

The post வீங்கிய முகத்துடன் போட்டோ நடிகை உர்பி தாக்கப்பட்டாரா? நெட்டிசன்கள் சரமாரி கேள்வி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Urbi ,Mumbai ,Urbi Javed ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு