×

2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் நஸ்ரியா

திருவனந்தபுரம்: குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக மாறியவர், நஸ்ரியா. மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த அவர், பிறகு மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் திருமணம் செய்துகொண்டார். தெலுங்கில் கடந்த 2022ல் நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தரானிகி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவர், 2 வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். இந்தநிலையில், மீண்டும் அவர் நடிக்க வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் படம், ‘சூக்‌ஷமதர்ஷினி’. இதில் முதன்மை வேடத்தில் பசில் ஜோசஃப் நடிக்கிறார். மற்றும் தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் நடிக்கின்றனர். எம்.சி.ஜித்தின் இயக்குகிறார். சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் கார்ட்டூன் வடிவில் நஸ்ரியா, பசில் ஜோசஃப் ஆகியோரின் முகங்கள் வரையப்பட்டுள்ளன.

 

The post 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் நஸ்ரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nazriya ,Thiruvananthapuram ,Bahad Basil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆவேசம் பட பாணியில் காருக்குள் நீச்சல்...