கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளுர்:  திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ – மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியது: இளைஞர்களிடையே மது பழக்கம் தவிர்த்து, கஞ்சா மற்றும் பல்வேறு தீய பழக்கங்கள் ஏற்படுவது வருத்தத்திற்குரியது. இதில் மது பழக்கம் இருந்தால் பெற்றோர்கள் கண்டறிய  வாய்ப்புள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால், மது பழக்கம் மட்டுமல்லாமல் கஞ்சா உள்ளிட்ட சில போதைப் பழக்க வகைகளும் உள்ளது. அதற்கு விளையாட்டை முன்னிருத்தி, எடுத்துச் சென்றால் மாணவர்கள் தடம் மாறாமல் இருக்க முடியும் அதற் பொருட்டு இந்த விளையாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது அதுமட்டுமல்லாமல், அந்தந்த பள்ளியிலேயே பெற்றோர் ஆசிரியர்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு, பள்ளிகளுக்குள்ளேயே இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், விழிப்புணர்வு கொடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், ஒரு பங்காக இந்த விளையாட்டுப் பயிற்சி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருப்பதினாலும், விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும், மாணவர்கள் விலகி வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.பேரணியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன்,  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: