மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronics

சென்னை: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை Zebronics அறிமுகம் செய்கிறது. சென்னை, இந்தியா ஜூன் 6, 2022 – உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் லைஃப் ஸ்டைல் ஆக்ஸஸரீஸ் பிராண்டான Zebronics, இன்று மேட்-இன்-இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட டவர் ஸ்பீக்கரான ZEB-BT800RUF-ஐ அறிமுகம் செய்தது. அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டவர் ஸ்பீக்கரான இது வயருடன் கூடிய மைக்குடன் விற்பனைக்கு வருகிறது. இது உங்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளின் கொண்டாட்ட அனுபவத்தினை மேலும் அதிகரிக்கும். ZEB-BT800RUF-ஆனது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும். Zebronics நிறுவனமானது, மக்களுக்காக நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் புதுமையான தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலமாக உற்பத்தி துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. இது, நமது பாரத பிரதமரின் நோக்குநிலையான ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ (சாதாரண மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களை ஆதரிப்பது) மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ முன்னெடுப்புகளுடன் ஒத்துப் போகிறது. ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரானது, வீட்டில் நடக்கக்கூடிய பார்ட்டிகள் மற்றும் சந்திப்புகளுக்கு மிகவும் பொருத்தமானது. இதன் குறைந்தபட்ச வடிவமைப்பு, சிறிதான அளவு இதனை அறையின் எந்த பகுதிக்கும் தூக்கிச் செல்லும் அளவுக்கு போதுமானதாக உள்ளது. இது கச்சிதமான அளவுடன் அழகாகவும் இருப்பதால் அறையில் இருக்கும் அலங்காரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். இது வயருடன் கூடிய மைக்குடன் வருவதால் வீட்டு தோட்டத்தில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு அல்லது வீட்டின் ஹாலில் நடக்கும் கொண்டாட்டங்களில் பாடல்களுக்கான கரோக்கிகளை ப்ளே செய்து அதனோடு பாடி ஜாலியாக இருக்க முடியும். இந்த டவர் ஸ்பீக்கரானது இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு ஸப்வூஃப்பரிரை மேம்பட்ட இசை தரத்தை அளிப்பதற்காக கொண்டுள்ளது. மேம்பட்ட இசை அனுபவத்திற்காக இந்த டவர் ஸ்பீக்கரில் இரண்டு 3′ ஃபுல் ரேஞ்ச் டிரைவர் மற்றும்  5.3′ ஸப்வூஃப்பர் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் அதிக கனெக்டிவிட்டி வசதிகளுடன் வருவதால் உங்களால் உங்களது இசையினை வயர் கனெக்ஷன் இல்லாமல் நேரடியாக ப்ளூடூத் மூலமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும். USB/AUX போன்ற இன்புட் ஆப்ஷன்களுடன் வரக்கூடிய இந்த ஸ்பீக்கரானது ஒரு பிள்ட்-இன் FM ரேடியோவினையும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, ஒலிசாதன தயாரிப்பில் அதன் பரந்த அளவிலான உயர்தர தயாரிப்புகளோடு இந்த பிராண்டானது முன்னணியில் உள்ளது. இந்த தயாரிப்பின் வெளியீட்டு விழாவில், Zebronics-இன் இயக்குனரான திரு. பிரதீப் தோஷி பேசுகையில், ‘இந்தியாவில் சிறந்த தரமான, உயர்தரமான ஒலிசாதன தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களது ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். இது நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளான ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ ஆகியவைற்றுடன் ஒத்துப்போகிறது. அன்புடன் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். ZEB-BT800RUF-ஆனது Amazon.in-இல் ஆஃப்பர் விலையில் ரூ. 5,099-க்கு கிடைக்கிறது. Zebronics நிறுவனத்தை பற்றி: 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Zebronics நிறுவனமான இது, இந்திய ஒலிசாதன தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும்  விளையாட்டு சாதனங்கள், மொபைல்/லைஃப்ஸ்டைல் ஆக்ஸஸரீஸ், ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ், ஹெல்த்கேர் மற்றும் ஸர்வைலன்ஸ் சொல்யூஷன்ஸ் ஆகியவற்றில் வடிவமைப்பு & செயல்திறனில் ‘அனைத்து மக்களுக்குமான உயர் தர’ தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது….

The post மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது Zebronics appeared first on Dinakaran.

Related Stories: