அம்மையார்குப்பத்தில் சூறைக்காற்றுடன் கனமழை 12 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி‌

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறை காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. காற்றுடன் கூடிய கனமழைக்கு அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, பாலாபுரம், விளக்கனாம்பூடி புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மரங்கள் உடைந்தும் விழுந்தது. இதனால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது‌. அம்மையார்குப்பத்தில் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்‌. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் முழுமையாக தடைபட்டதால், குழந்தைகள், முதியோர், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் சரி செய்து ஒரு சில பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அம்மையார்குப்பத்தில் மட்டும் 12 மணி நேரங்களுக்கு மேலாக மின்சாரம் தடைபட்டதால், பொதுமக்கள் குடிநீருக்கும் அவதிப்பட்டனர். இதேபோல் விளக்கனாம்பூடி புதூரில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணை சூறைக் காற்றின் வேகத்திற்கு மேற்கூரை முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதேபோல் பல்வேறு கிராமங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மரங்கள் உடைந்து விழுந்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டது. …

The post அம்மையார்குப்பத்தில் சூறைக்காற்றுடன் கனமழை 12 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி‌ appeared first on Dinakaran.

Related Stories: