கூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா

லால்குடி: கூகூர் மூங்கிலடியான் கோயிலில் நடந்த வேட்டைசார் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் மூங்கிலடியான் கோயில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோயிலில் 150 வருடங்களுக்கு மேலாக கூகூர், ஆனந்திமேடு, சாத்தமங்கலம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக ஆடி மாதத்தில் மூங்கிலடியானுக்கு பூஜை போட்டு, வேட்டைசார் திருவிழா நடத்துவது வழக்கம்.

Advertising
Advertising

இந்தாண்டுக்கான வேட்டைசார் திருவிழா நேற்று மூங்கிலடியான் கோயிலில் நடந்தது. இதனையொட்டி 20 மூட்டை பச்சரிசியை சமைத்து, 25 ஆடுகள் வெட்டி மூங்கிலடியானுக்கு பூஜை நடத்தினர். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள திடலில் குழிகளை வெட்டி, அதில் வாழை இலைகளை போட்டு, சாதம், ஆட்டுக்கறியை ரசமாக ஊற்றி பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். வேட்டைசார் திருவிழாவில் கூகூர், ஆனந்திமேடு, சாத்தமங்கலம், நன்னிமங்கலம், இடையாற்றுமங்கலம், லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: