ராமநாத ஈஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் ராமநாத ஈஸ்வரர் கோயிலில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. கண்ணமங்கலம் நாகநதிக்கரையில் பழமை வாய்ந்த ராமநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று திருவாசகம் முற்றோதுதல் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் வளாகத்தில் இசை வாத்தியங்களுடன் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதில் சிவனடியார்கள் திருவாசக பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடினர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: