பலன் தரும் ஸ்லோகம் : (பதவி உயர்வு கிட்ட, வாழ்வில் வளம் பெற...)

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
Advertising
Advertising

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

பொதுப்பொருள்:  

பொன் போன்ற திருமேனியனே! இடையில் புலித்தோலை தரித்தவனே!  மின்னும் சடையின் மீது மிளிரும் கொன்றை மாலை தரித்தவனே!  எம் மன்னனே! மாமணியாய் துலங்கும் மழபாடி மாணிக்கமே! தங்களையல்லால் இனி யாரையும் நினைக்க மாட்டேன்.

(இந்தத் துதியை தினமும் காலையில், சிவபெருமானுக்கு பூஜை செய்து 11 முறை கூறி வர வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும். வாழ்வு வளம் பெறும்.)

Related Stories: