பைர தேவி டீசர் வெளியானது

பெங்களூரு: பிரபல கன்னட நடிகையும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா அகோரியாக நடித்து இருக்கும் படம் பைர தேவி.
இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு பைர தேவி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த டீசரின் மூலம் ஒரு பெண் அகோரியாக ராதிகா குமாரசாமியை அறிமுகப்படுத்தி உள்ளனர். டீசர் ஆரம்பத்தில் பல அகோரிகளுடன் ராதிகா ஒரு பிணத்தில் மேல் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மிரளவைக்கிறது.

ராதிகா குமாரசாமி இப்படத்தை தயாரித்தும் உள்ளார். ஸ்ரீ ஜெய் இப்படத்திற்கு கதை ,திரைக்கதை, வசனங்களை அமைத்து இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ரங்கையனா ரகு, ரவிசங்கர், ஸ்கந்தா அசோக் ,அனு முகர்ஜி,மாளவிகா அவினாஷ் ,சுசீந்திரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜே.எஸ்.வாலி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேகே. செந்தில் பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பான் இந்தியா படமான இது, விரைவில் ரிலீசாகிறது.

The post பைர தேவி டீசர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: