தஞ்சை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் வரும் 27-ம் தேதியோடு அரவை பணிகள் நிறுத்தப்படும் என ஆலை நிர்வாகம் அறிவிப்பு: அரவை பணிகளை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான அரவை பணிகள் வரும் 27-ம் தேதியோடு நிறுத்தப்படும் என ஆலை நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு கரும்பு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சையை அடுத்துள்ள குறுங்குளம் அரசு சர்க்கரை ஆலையை நம்பி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்புகளை வெட்ட போதிய கூலியாட்கள் கிடைக்காததால் கரும்பு அறுவடை பணிகள் தாமதமாகியுள்ளது. 20 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் வயலில் தேக்கமடைந்துள்ளன.இந்நிலையில் வரும் 27-ம் தேதியுடன் நடப்பு ஆண்டிற்கான அரவை பணி நிறுத்தப்படும் என குறுங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்திருப்பது கரும்பு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க கரும்பு அரவை பணிகளை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவை பணிகளை நீட்டிக்காவிட்டால் விளைந்த கரும்புகள் வயலிலே காய்ந்து வீணாகிவிடும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.                 …

The post தஞ்சை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் வரும் 27-ம் தேதியோடு அரவை பணிகள் நிறுத்தப்படும் என ஆலை நிர்வாகம் அறிவிப்பு: அரவை பணிகளை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: