திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் நேற்று சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளது. இதில் பக்தர்கள் முக்கியமாக தரிசிக்கும் கோயில்களில் ஒன்று திருநேர் அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் சித்திரை முதல்நாளான தமிழ்புத்தாண்டு அன்று கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் மீது சூரியஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.அதன்படி தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளான நேற்று அதிகாலையிலேயே திருநேர் அண்ணாமலையார் கோயில் திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிசேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வு நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ நிகழ்வை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு அன்று நடைபெறும் சூரிய ஒளி பிரகாசிக்கும் நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளி பிரகாசிக்கும் நிகழ்வினை காண திரண்டிருந்தனர்….

The post திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: