சென்னை வியாபாரிகளிடம் 264 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 பேர் சிக்கினர்: 24 பவுன் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தங்கபெருமாள் மகன்கள் பெரியசாமி (35), ஆனந்தராசு (34). இருவரும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த கடந்த 10ம் தேதி தங்களது குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களுடன் ஒரு டெம்போ டிராவலர் வேனில் சொந்த ஊரானா விளாத்திக்குளம் அருகே புதூர் நாகலாபுரம் பகுதிக்கு சென்றனர். வேனை, பாண்டியன்(35) என்பவர் ஓட்டிச் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் காந்தி நகர் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு டீக்கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் டீ சாப்பிடுவதற்காக இறங்கி உள்ளனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, வேனின் மேல் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில் இருந்த 264 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் 2 தனிப்படை போலீசார், மதுரையில் முகாமிட்டு கொள்ளை கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் வழிப்பறி மற்றும் வாகனங்களில் எடுத்து செல்லும் பெட்டிகளை கொள்ளை அடிக்கும் மதுரையை சேர்ந்த பிரபல கொள்ளை கும்பல் தலைவனை தனிப்படை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவன் தப்பி விட்டான். அவனது கூட்டாளிகள் இரண்டு பேர் போலீசாரிடம் சிக்கினர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 24 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து வரும் வழியில் விக்கிரவாண்டியில் சாலையோரம் டீக்கடையில் வேனை நிறுத்தி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பின்னால் ஒரு மினி டெம்போவில், வியாபாரிகள் சென்ற வேனை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், வேன் மெதுவாக செல்லும் போது, கொள்ளையன் வேன் மேலே ஏறி அங்கிருந்த 2 பெட்டிகளை தூக்கி கீழே போட்டுள்ளான். அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது தெரியவந்தது. வேனை பின்தொடர்ந்து வந்த வண்டி மதுரையை சேர்ந்தது என தெரியவந்ததை அடுத்து தனிப்படையினர் அங்கு சென்று மதுரை போலீசாரின் உதவியுடன் 2 பேரை கைது செய்துள்ளனர். …

The post சென்னை வியாபாரிகளிடம் 264 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 பேர் சிக்கினர்: 24 பவுன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: