2 ஆண்டுகளுக்கு பின் கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து உற்சாகம்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 2 ஆண்டுக்கு பின் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் குளிர்ச்சியான சுற்றுலா தளங்களை தேடி செல்கின்றனர். வெப்பத்தை தணிக்க  நீர்வீழ்ச்சியில் மக்கள் குளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கொடிவேரி அணையில் குளிக்க அரசு அனுமதியளித்துள்ளது.இதனால்,  கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிவேரி அணைக்கு வந்தனர். இதனால், கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் 1 கி.மீ. தூரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டன. அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் மக்கள் குளித்து மகிழ்ந்தனர். குடும்பம் சகிதமாக வந்த மக்கள் பாதுகாப்பு கம்பி வளையத்துக்குள் குளித்தனர். அருவியில்  ஆனந்தமாய் குளித்து விளையாடினர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி குளிக்கும் சுற்றுலா பயணிகளை போலீசார் கட்டுப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் படகு சவாரி செய்து இயற்கையின் அழகை கண்டு ரசித்தினர். சுற்றுலா பயணிகள் அதிகமான நிலையில் மீன் வறுவல் விற்பனையும் சூடுபிடித்துள்ளது….

The post 2 ஆண்டுகளுக்கு பின் கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: