இந்தி, தெலுங்கில் மாநாடு ரீமேக்: வெங்கட் பிரபு தகவல்

சென்னை: அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படம், மன்மத லீலை. வரும் ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசியதாவது: நிச்சயமாக இது ஆபாச படம் இல்லை. எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது. எனவே, அதுபோன்ற படங்களை நான் இயக்க மாட்டேன். மாநாடு படத்தை விட அதிகமான டுவிஸ்ட்டுகள் இருக்கும். என் உதவியாளர் மணிவண்ணன் எழுதிய கதை இது. அசோக் செல்வனுக்கும், சம்யுக்தா ஹெக்டேவுக்கும் முத்தக்காட்சி படமாக்கப்பட்டபோது, அசோக் செல்வனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படத்தில் இரண்டு டைம்லைன் முறையில் கதை சொல்லப்படுகிறது. அடுத்து தெலுங்கில் நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். தமிழில் சிம்பு நடிப்பில் ஹிட்டான மாநாடு படத்தை இந்தியிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்குகிறேன். இதில் நடிக்கும் ஹீரோக்களுக்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.  இவ்வாறு அவர் பேசினார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தென்னிந்திய நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்காக, ₹5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பெற்றுக்கொண்டார்….

The post இந்தி, தெலுங்கில் மாநாடு ரீமேக்: வெங்கட் பிரபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: