சென்னை: ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய, உண்மையான பதில் அளித்துள்ளேன் என விசாரணைக்கு பின் ஓபிஎஸ் பேட்டியளித்தார். 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்கு கடிதம் வந்தது என கூறினார். ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை சம்மன் அனுப்பியது. பட்ஜெட் மற்றும் சொந்த காரணங்களால் நேரில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார். 2 முறை சொந்த காரணங்களால் என்னால் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். முரண்பட்ட பதில் எதையும் நான் அறுமுக சாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை என கூறினார். சசிகலா குறித்து பேசும்போது சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது என கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 74 நாட்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என கூறினார். சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை போக்கவே விசாரணை நடத்த கோரினேன் என குறிப்பிட்டார். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என பதில் கூறியுள்ளேன் என கூறினார். ஆறுமுக சாமி ஆணையத்தில் விசாரணை முழு திருப்தியாக இருந்தது என தெரிவித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் விளக்கம்: சசிகலா மீது சந்தேகம் இல்லை என ஓபிஎஸ் கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டியன் விளக்கம் அளித்தார். ஜெயலலிதா மரணம், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்தப்பட்டது என கூறினார். ஆறுமுகசாமி ஆணையத்திடம் மீண்டும் ஒபிஎஸ் ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது என வழக்கறிஞர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட ஐயம் உள்ளதா என கேட்டேன், இல்லை என ஓபிஎஸ் பதில் அளித்ததாக அவர் கூறினார். மக்களின் சந்தேகத்தை போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்று ஓபிஎஸ் கூறியதாக அவர் தெரிவித்தார். …
The post ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய, உண்மையான பதில் அளித்துள்ளேன்: விசாரணைக்கு பின் ஓபிஎஸ் பேட்டி appeared first on Dinakaran.