வடமாநிலம் செல்லும் கன்னிவாடி தேங்காய்-உறிக்கும் பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை

சின்னாளபட்டி : ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம், ஆத்தூர், சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தருமத்துப்பட்டி, கோம்பை ஆகிய பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்கள் காங்கேயம், பல்லடம், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு அனுப்புகின்றனர். மேலும், வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தேங்காய்களை உறிப்பதற்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், குடோன்களில் தேங்காய்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கன்னிவாடி பகுதியில் முகாமிட்டு தேங்காய்களை உறித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு தேங்காய்க்கு ரூ.60 பைசா கூலியாக வழங்கப்படுகிறது.இது குறித்து அய்யம்பாளையம் தேங்காய் உறிப்பவர்கள் சங்க கருப்பையா கூறுகையில், ‘ஒவ்வொரு வினாடியும் உயிரை பணய வைத்து தேங்காய் உறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கூர்மையான கடப்பாரை வயிற்றில் இறங்கி விடும். தற்போது ஒரு தேங்காய் உறிப்பதற்கு கூலியாக 60 பைசா கொடுக்கின்றனர். வருடத்திற்கு 6 மாதம்தான் வேலை கிடைக்கும். பாக்கி ஆறு மாதங்களில் நாங்கள் வேறு வேலைக்கு செல்கிறோம்’ என்றார்….

The post வடமாநிலம் செல்லும் கன்னிவாடி தேங்காய்-உறிக்கும் பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை appeared first on Dinakaran.

Related Stories: