ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை: உக்ரைன் போருக்கு பதிலடி என்று ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு பதிலடியாக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ள ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா தினமும் 7 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையால் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த தாடையில் எண்ணெய் மற்றும் எரிசக்தியும் அடங்கும் வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார தடையை அமெரிக்கா அமல்படுத்தி இருப்பதால் உலக அளவில் அதிர்ச்சி நிலவுகிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவை விட அதிக அளவில் நம்பியுள்ள ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் 10%க்கும் குறைவாகவே உள்ளது. இதனால் இந்த பற்றாக்குறையை அமெரிக்காவில் சரி செய்ய முடியும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தடைக்கு முன்பே போர் காரணமாக அமெரிக்காவில் எண்ணெய் விலை 30% உயர்ந்துள்ளது. தற்போதைய தடையால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இது தற்காலிகமானது என்று கூறும் நிபுணர்கள் அமெரிக்கா ஏற்கனவே தடைகளை விதித்த ஈடான, வெனிசுலாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  …

The post ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை: உக்ரைன் போருக்கு பதிலடி என்று ஜோ பைடன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: