பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் `சஸ்பெண்ட்’

சேலம்:  சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 111-வது ஆட்சிக்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற இருந்தது. இதற்காக வைக்கப்பட்டிருந்த 14வது தீர்மானத்தில், வரும் ஜூன் 10ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள, இயற்பியல் துறை தலைவர் குமாரதாஸிற்கு, ஓராண்டிற்கு பணி நீடிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இது அரசின் கொள்கைக்கு எதிரானது என கூறி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரேம்குமார், இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு மனு அனுப்பினார். இதனிடையே, ஆட்சிக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆட்சிக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை வெளியே பரப்பியதாக, பேராசிரியர்  பிரேம்குமாரை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்….

The post பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் `சஸ்பெண்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: