உக்ரைன் – ரஷ்யா இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை போரை நிறுத்துவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை!: மனிதாபிமான உதவிகள் வழங்க இரு நாடுகளும் சம்மதம்

கீவ்: உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதேநேரம் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் படைகளின் தாக்குதல் 2வது வாரத்தை எட்டிய நிலையில், தெற்கு நகரமான கெர்சனை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3வது நாளாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மரியுபோல், செர்னிஹிவ் நகரங்களில் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது. தலைநகர் கீவ் நகரை சுற்றிவளைத்துள்ள ரஷ்யா, அந்த நகரை முழுமையாக கைப்பற்றவில்லை. இங்கு, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வலுவான படைகளுடன் ரஷ்யாவுக்கு எதிராக பதிலடி கொடுத்து வருகிறார். இருதரப்பு தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், அணு ஆயுத எச்சரிக்கை ரஷ்யா தரப்பில் விடுக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தடைகளை விதித்து வருகின்றன. சர்வதேச நிர்பந்தங்களை தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தன. கடந்த திங்கட் கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸில் நடந்தது. அதில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் இந்திய நேரப்படி நேற்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. அதனால், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி, நேரம், இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலகத் தலைவரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் ெவளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது உக்ரைனில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து மட்டுமே பேசப்பட்டது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதேநேரம் ராணுவப் பிரச்னைகள், எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளார். …

The post உக்ரைன் – ரஷ்யா இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை போரை நிறுத்துவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை!: மனிதாபிமான உதவிகள் வழங்க இரு நாடுகளும் சம்மதம் appeared first on Dinakaran.

Related Stories: