நடிக்க தடை போட்டது யார்: ஜெனிலியா விளக்கம்

மும்பை: பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து ஜெனிலியா கூறியது: என் கணவர் தான், என்னை படத்தில் நடிக்க அனுமதி தரவில்லை என்று மக்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் நான் தான் அந்த முடிவை எடுத்தேன். ஒரே நேரத்திலும் குடும்பத்தையும், சினிமாவையும் என்னால் பார்க்க முடியாது. என்னால் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என் குழந்தைகளுடன் இருப்பதன் முழுப் பகுதியையும் நான் இன்னும் ரசிப்பதாக உணர்கிறேன்.

என் குழந்தைகளுடன் இருப்பதை விரும்புகிறேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அப்போது அதை தேர்வு செய்வேன். மேலும் நல்ல அம்சம் என்னவென்றால், நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் தீர்மானிப்பதில்லை. கல்லூரியில் படித்த நாளில் இருந்து அதை தான் செய்து வருகிறேன். என் மகன்கள் என்னிடம் எந்த ேதவைகளையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அதனால்தான் வேத் மராத்தி படத்தில் நடித்தேன். இனி தொடர்ந்து நடிப்பேன்.

The post நடிக்க தடை போட்டது யார்: ஜெனிலியா விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: