ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவா மகன்

சென்னை: பல்வேறு மொழிகளில் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றி வருபவர், ஸ்டன் சிவா. சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். படம் தயாரித்து, இயக்கி இருக்கிறார். 25 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் அவர், சமீபத்தில் ‘ருத்ரன்’, ‘விடுதலை’, ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றினார். ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் ‘ஜெயிலர்’ படத்திலும் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கடந்த சில வருடங்களாக தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பணியாற்றியதுடன், அதன் நுணுக்கங்களையும் கெவின் குமார் கற்றுள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களில் சில சண்டைக் காட்சிகளை அவரே வடிவமைத்துள்ளார். அவர் வடிவமைத்த நேர்த்தியைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், அவரைப் பாராட்டி வாழ்த்தினார்.

The post ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவா மகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: