திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருக்கல்யாண கோலத்தில் முருகன் வீதி உலா: மாசிமாத பிரம்மோற்சவம் நிறைவு

திருப்போரூர்.: சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசிமாத பிரம்மோற்சம் நடப்பது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதி, 16ம் தேதி சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி மற்றும் தெப்ப உற்சவத்தை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை வேடர்பரி உற்சவம் நடந்தது.இந்நிலையில், முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. திருக்கல்யாண தினத்தையொட்டி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவரை, பக்தர்கள் ஆர்வமுடன் வழிபட்டனர். பிரம்மோற்சவ நிறைவை ஒட்டி கொடி மரத்தில் இருந்து அரோகரா கோஷத்துடன் கொடி கீழே இறக்கப்பட்டது. …

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருக்கல்யாண கோலத்தில் முருகன் வீதி உலா: மாசிமாத பிரம்மோற்சவம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: