சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் ராகுல் போஸ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ படம் வெளியாகவுள்ளது. மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது முதல் படமாக யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ வெளியாகியிருந்தது. இந்த படத்துக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது இதனையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எஸ்கே 21’ (தற்காலிக தலைப்பு) படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய தகவலாக ‘எஸ்கே 21’ படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ராகுல் போஸ் காஷ்மீரில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இவர் பாலிவுட் நடிகர். இந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கமல் தயாரிப்பில் விஸ்வரூபம் படத்தில் நடித்த அவர், இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார்.

The post சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் ராகுல் போஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: