வேலம்மாள் பள்ளியில் யூனியன் பட்ஜெட் சிறப்பு விவாத நிகழ்வு

திருவள்ளூர்: முகப்பேர் வேலம்மாள் முதன்மை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான யூனியன் பட்ஜெட் 2022 குறித்த விவாத அமர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு கவுரவ விருந்தினராக சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான பதிவு செய்யப்பட்ட  பயிற்சியாளராகிய தண்டபாணி தலைமை வகித்தார். விவாத அமர்வு தொடங்கியதும், அங்கு போட்டியாளர்கள் யூனியன் பட்ஜெட் குறித்த அவர்களின் கருத்துகளைப் பற்றி விரிவாகப் பேசினர். இந்த அமர்வு மாணவர்களுக்கு பட்ஜெட் பற்றிய தங்கள் அறிவுத்திறனை வளர்ப்பதாகவும் அதன் மீது பகுப்பாய்வு செய்யத் தூண்டுவதாகவும் அமைந்தது. மாணவர்களுக்கு நுண்ணறிவுக் கற்றலை வழங்கும் வகையிலும் இது அமைந்திருந்தது. இறுதியாக மாணவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வரவு-செலவுத் திட்டம் குறித்த தனது அறிவைத் தூண்டும் உரையின் மூலம் மாணவர்களை ஆர்வமூட்டினார். பின்னர் நிகழ்வு புகைப்பட அமர்வுடன் நிறைவு பெற்றது. வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இவ்விவாத அமர்வு மாணவர்களின் கருத்தியல் கற்றலைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது….

The post வேலம்மாள் பள்ளியில் யூனியன் பட்ஜெட் சிறப்பு விவாத நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: