இந்திய அணுசக்தி கழகம் டெண்டர் கூடங்குளத்தில் அணு கழிவு மையம்

நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணு உலைகளிலும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் நடந்து வருகின்றன. 2023ல் இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5, 6  அணு உலைகளும் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 6 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரம் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.கூடங்குளத்தில் அணு மின் உற்பத்திக்காக யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிகோல்களில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பராமரிப்பு பணியின் போது மாற்றப்படும். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எரிகோல்களை பாதுகாக்க அணு கழிவு மையமும் கூடங்குளத்தில் அமைக்கப்படுகிறது.இதற்கு பல்வேறு சமயங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அணு கழிவு மையம் கூடங்குளத்தில் அமைக்க அணு உலை எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் 1, 2 அணு உலைகளுக்கான அணு கழிவு மையம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் 3, 4 அணு உலைகள் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் பகுதிக்கு வெளியே (Away from Reactor) அவற்றுக்கான அணு கழிவு மையம் அமைக்க இந்திய அணு சக்தி கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதற்காக வருகிற 24ம் தேதி காலை 11 மணிக்குள் டெண்டர் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் கால அவகாசம் முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில் அதாவது, பிப்.24ம் தேதி காலை 11.30 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் எனவும் இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

The post இந்திய அணுசக்தி கழகம் டெண்டர் கூடங்குளத்தில் அணு கழிவு மையம் appeared first on Dinakaran.

Related Stories: