கோபியில் நிலத்தை மீட்டுத்தரகோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்: தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு..!!

ஈரோடு: கோபி அருகே நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனியில் 200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் 8 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு நபருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் அனைத்து வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். நிலத்தை மீட்பதற்காக கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நிலத்தை விற்பனை செய்தவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் நிலத்தை வாங்கியவர் சுற்றுச்சுவர் அமைத்துள்ளதால் கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.         …

The post கோபியில் நிலத்தை மீட்டுத்தரகோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்: தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: