இதில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர். ஒருவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 4 ஊழியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், தங்கள் ஊழியர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் குறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, பயணி மீது உரிய நடவடிக்கை எடுக்க ஸ்பைஸ்ஜெட் கோரியுள்ளது. விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி பயணியை பறக்க தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது.
The post கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் கேட்டதால் விமான நிறுவன ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: ராணுவ அதிகாரி மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.
