இதுபற்றி ஒரு பேட்டியில், ‘நான் மதன்பாப்பின் சிஷ்யன்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார். தனது வேடிக்கையான முக பாவனைகள் மற்றும் நீளமான சிரிப்பு, நீண்டிருக்கும் கண் இமைகளுக்காக மதன்பாப் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மறைந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் காகா ராதாகிருஷ்ணனால் ஈர்க்கப்பட்ட அவர், கடந்த 1974ல் பாலு மகேந்திரா இயக்கிய ‘நீங்கள் கேட்டவை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில், அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ள மதன்பாப், கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை அடையாறிலுள்ள வீட்டில், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த மதன் பாப்பிற்கு மனைவி சுசீலா, மகள் ஜனனி, மகன் அர்ஷித் ஆகியோர் உள்ளனர். மதன்பாப் கடைசியாக நடித்த ‘சென்னை ஃபைல்ஸ்: முதல் பக்கம்’ என்ற படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. மதன்பாப் மறைவுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செய லாளர் பிரேமலதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post புற்றுநோய் பாதிப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் மதன்பாப் திடீர் மரணம் appeared first on Dinakaran.
