உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார் சந்திரசூட்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பதவி விலகினார். அரசு விதிகளின்படி அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதற்கான அவகாசம் மே31ம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. பதவி விலகிய பின்னரும் முன்னாள் தலைமை நீதிபதியின் குடும்பத்தினர் டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தங்கி இருந்தனர். இதுசர்ச்சையை எழுப்பியது.

இது தொடர்பாக ஜூலை மாதம் 7ம் தேதி பேசிய முன்னாள் நீதிபதி சந்திர சூட், தனது மகள்களின் மருத்துவ நிலை தொடர்பான வசதி அடிப்படையில் புதிய வீடு தயாரானவுடன் காலி செய்து விடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தற்போது காலி செய்துள்ளார்.

The post உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார் சந்திரசூட் appeared first on Dinakaran.

Related Stories: