தமிழகத்தில் இந்த யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்கவும், வழிநடத்திடவும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. மாநில அளவிலான குழுவில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் மதி கவிதா ஸ்ரீகாந்த், ஓபிசி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு, சேலம் நகர் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பி.சுரேஷ்பாபு, மதுரை நகர் முன்னாள் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், தென்காசி மாவட்ட பார்வையாளர் ஏ.மகாராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா யாத்திரை முருகானந்தம் தலைமையில் பாஜ குழு: நயினார் அறிவிப்பு appeared first on Dinakaran.
