சஸ்பெண்ட் டிஎஸ்பியால் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், கடந்த மாதம் 17ம்தேதி அவரது அலுவலக வாகனம் பறிக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுத்துவது தொடர்பாக தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்தார். இந்நிலையில் மயிலாடுதுறை தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரனை நேற்று திடீரென வடக்கு மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சஸ்பெண்ட் டிஎஸ்பியால் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: