வரும் 11ம் தேதி தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளிமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்

பொன்னை : பொன்னை அடுத்த வள்ளிமலை முருகன் கோயிலில் வரும் 11ம் தேதி மாசி மாத தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மலை உச்சியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரமோற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் 26ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. ற்று முன்தினம் வள்ளிமலை முருகன் கோயிலில் விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று மலை உச்சியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மாலை மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளி அருள்பாலித்தார் தொடர்ச்சியாக நாளை சிம்ம வாகனத்திலும் நாளை மறுதினம் தங்க மயில் வாகனத்திலும்,  வரும் 8ம் தேதி நாக வாகனத்திலும், 9ம் தேதி அன்ன வாகனத்திலும் 10ம்  தேதி யானை வாகனத்திலும் முருகன் எழுந்தருளி அருள்பலிப்பார். இதனையடுத்து 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தேரோட்டம் நடைபெறும். பின்னர் 15ம் தேதி முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விழாக்குழுவினர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் திருவிழாவின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் தமிழகத்தில் கணிசமாக குறைந்துள்ள நிலையில் அரசு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோயிலில் விழா ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது….

The post வரும் 11ம் தேதி தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளிமலை முருகன் கோயிலில் கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: