இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’ தொடக்கம்

சென்னை: இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க இந்த கல்வியாண்டு முதல் ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’ தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடக கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பினை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘சென்னை இதழியல் நிறுவனத்தை’ தொடங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை இதழியல் கல்வி நிறுவனம் 2025-2026ம் கல்வியாண்டு முதல் சென்னையில் தொடங்கப்படும். இதற்காக, ரூ.7.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை இதழியல் நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பினை இந்த கல்வியாண்டு முதல் (2025-2026) தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

The post இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’ தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: