×

2வது முறையாக ஹூரியத் மாநாட்டு தலைவருக்கு வீட்டு காவல்

ஸ்ரீநகர்: ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,நான் தொடர்ந்து 2 வது வெள்ளிக்கிழமையும் வீட்டு காவலில் உள்ளேன்.எனது வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொரு பாதையும் தடுப்புகளால் மூடப்பட்டு, முழு சுற்றுப்புறத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்.ஆட்சியாளர்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நமது தியாகிகளின் நினைவை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தியாகிகளின் கல்லறைகளுக்கு மக்கள் செல்வதைத் தடுப்பதன் மூலம் உண்மைகளையும் வரலாற்றையும் அழிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post 2வது முறையாக ஹூரியத் மாநாட்டு தலைவருக்கு வீட்டு காவல் appeared first on Dinakaran.

Tags : Hurriyat Conference ,Srinagar ,Mirwaiz Umar Farooq ,X site ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...