×

உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் பங்கேற்பு


திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சாண்டியின் 2வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். நேற்று காலை புதுப்பள்ளி வந்த அவர், உம்மன் சாண்டியின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து புதுப்பள்ளி கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும், நினைவஞ்சலி கூட்டத்திலும் கலந்து கொண்டார். அதன் பிறகு உம்மன் சாண்டியின் தொண்டு நிறுவனமான ஸ்மிருதி தரங்கம் சார்பில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட 12 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் திருவனந்தபுரம் சென்று ஏ.கே. அந்தோணியை சந்தித்து நலம் விசாரித்தார்.

The post உம்மன் சாண்டி நினைவு தினம்: ராகுல் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Oommen Chandy Memorial Day ,Rahul ,Thiruvananthapuram ,Former ,Kerala ,Chief Minister ,Oommen Chandy ,Pudupally ,Kottayam district ,Parliament ,Rahul Gandhi ,Pudupally… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...