×

ரவுடி கொலை: கர்நாடக பா.ஜ.க. எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு..!!

பெங்களூரு: பெங்களூருவில் ரவுடி கொலை தொடர்பாக கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் 5வது குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சொத்துத் தகராறில் ரவுடி சிவகுமாரை கொலை செய்ததாக பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ் மீது புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் நேற்று இரவு சிவகுமார் 9 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 40 வயதான சிவகுமார் மீது 11 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தது.

The post ரவுடி கொலை: கர்நாடக பா.ஜ.க. எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Karnataka BJP MLA ,Bengaluru ,Pairathi Basavaraj ,Rowdy Shivakumar ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...