×

தெலங்கானாவில் நடைபயிற்சியின்போது இ.கம்யூ நிர்வாகி சுட்டுக் கொலை


ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாலக்பேட்டில் உள்ள சாலிவாஹன நகர் பூங்காவில் இ.கம்யூ கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் சந்து நாயக் என்ற சந்து ரத்தோட், அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து அவரது கண்களில் மிளகு தூள் வீசியது. பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் சந்து ரத்தோட்டை சுட்டான். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சந்து ரத்தோட் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. சந்து ரத்தோட்டின் மனைவி, இந்த கொலைக்கு சிபிஐ (எம்எல்) கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடனான நீண்டகால பகைமையே காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் பகைமை, தனிப்பட்ட பகை உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தெலங்கானாவில் அரசியல் வன்முறை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

The post தெலங்கானாவில் நடைபயிற்சியின்போது இ.கம்யூ நிர்வாகி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : E.Com ,Telangana ,Hyderabad ,Chandu Nayak ,Chandu Rathod ,Salivahana Nagar Park ,Malakpet, Hyderabad, Telangana ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...