சென்னை : பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம் செய்யப்பட்டது. ஐதராபாத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பயணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்து பயணி இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 163 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டது.
The post பயணிக்கு உடல் நலக்குறைவு: விமானம் நிறுத்தம் appeared first on Dinakaran.