×

உல்பா முகாம் மீது டிரோன்களை ஏவி தாக்குதலா?

கவுகாத்தி: இந்திய எல்லை அருகே மியான்மர் நாட்டில் உல்பா அமைப்பின் உள்ள முகாம்களின் மீது இந்திய ராணுவம் நேற்று டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக உல்பா தெரிவித்துஉள்ளது. இதுகுறித்து உல்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகலாந்தின் லாங்வா அருகே மியான்மர் எல்லையில் இருந்து அருணாச்சல் பிரதேசத்தின் பங்சாய் பாஸ் வரை நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை தாக்குதல் நடந்தது.

கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் உல்பா அமைப்பின் மூத்த தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நயன் மேதி கொல்லப்பட்டார். 19 பேர் காயமடைந்தனர். அதை தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

The post உல்பா முகாம் மீது டிரோன்களை ஏவி தாக்குதலா? appeared first on Dinakaran.

Tags : ULFA ,Indian Army ,Myanmar ,Indian border ,Myanmar border ,Langwa ,Nagaland… ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...