×

‘இன்ஸ்டா ரீலால்’ வந்தது பிரச்னை டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராம் செக்டர் 57ல் உள்ள சுஷாந்த் லோக் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ். வயது 25. மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை. ஐடிஎப் இரட்டையர் பிரிவில் முதல் 200 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தார். இரட்டையர் டென்னிஸ் பிரிவில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 113வது இடத்தில் இருந்தார். நேற்று காலை 11.30 மணி அளவில் ராதிகா வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் தொடர்பாக அவருக்கும், அவரது தந்தை தீபக் யாதவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக் யாதவ் துப்பாக்கியால் ராதிகாவை 3 முறை சுட்டார். இதில் குண்டுக்காயம் அடைந்த ராதிகாவை குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராதிகா பலியானார். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

The post ‘இன்ஸ்டா ரீலால்’ வந்தது பிரச்னை டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை appeared first on Dinakaran.

Tags : Gurugram ,Radhika Yadav ,Sushant Lok ,Gurugram Sector 57, Haryana ,IDF ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...