×

ஜாக்ரப் ரேபிட் செஸ் குகேஷ் சாம்பியன்: கார்ல்சனுக்கு 3ம் இடம்

ஜாக்ரப்: குரோஷியாவில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். குரோஷியாவின் ஜாக்ரப் நகரில் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. ரேபிட் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியின் முதல் சுற்றில் கிறிஸ்டோப்பிடம் தோல்வியை தழுவிய குகேஷ் அடுத்த 5 சுற்றுகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து அசத்தி இருந்தார். அதில் ஒரு சுற்றில் நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் அபாரமாக வீழ்த்தினார். இப்போட்டியில் கார்ல்சனுக்கு 3ம் இடமே கிடைத்தது.

The post ஜாக்ரப் ரேபிட் செஸ் குகேஷ் சாம்பியன்: கார்ல்சனுக்கு 3ம் இடம் appeared first on Dinakaran.

Tags : Zagreb ,Rapid ,Chess Kukesh ,Carlsen ,World ,Kukesh ,Tamil Nadu ,Chess Championship ,Croatia ,Super United Rapid and ,Blitz Chess Tournament ,Zagreb, Croatia.… ,Zagreb Rapid Chess Kukesh ,Dinakaran ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு அல்காரஸ் தகுதி