×

இலங்கையுடன் 2வது டி20 இந்தியா அட்டகாச வெற்றி

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை மகளிர் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா அற்புதமாக வென்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நேற்று 2வது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீராங்கனை விஸ்மி குணரத்னே 1 ரன்னில் கிரந்தி கவுட் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வீழ்ந்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு துவக்க வீராங்கனையான கேப்டன் சமாரி அத்தப்பட்டு, 31 ரன்னுக்கு அவுட்டானார். பின் வந்தோரும் சொதப்பலாக ஆடியதால், 20 ஓவரில் இலங்கை, 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா தலா 2, கிரந்தி கவுட், ஸ்நேஹ் ராணா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். அதையடுத்து, இந்திய மகளிர், 129 ரன் வெற்றி இலக்குடன் தங்கள் இன்னிங்சை தொடங்கினர்.

துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ், 26 ரன்னில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா அட்டகாசமாக ஆடி அரை சதம் கடந்தார். 11.5 ஓவரில் இந்திய மகளிர், 3 விக்கெட் மட்டுமே இழந்து 129 ரன் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். ஷபாலி 69, ரிச்சா கோஷ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Tags : India ,Sri Lanka ,Visakhapatnam ,women's team ,T20 ,
× RELATED இத்தாலி சூப்பர் கோப்பை கால்பந்து...