×

ஐசிசி மகளிர் டி20 தரவரிசை தீபறக்க பந்து வீச்சு தீப்தி சர்மா நம்பர் 1

துபாய்: ஐசிசி டி20 மகளிர் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தீப்தி சர்மா முதல் முறையாக, முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை மகளிர் அணிக்கு எதிராக, இந்தியாவில் சமீபத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அனல் பறக்க பந்துகள் வீசி அசத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று வெளியான ஐசிசி டி20 மகளிர் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில், தீப்தி சர்மா, 737 புள்ளிகள் பெற்று முதல் முறையாக, முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை அனபெல் சதர்லேண்ட், 736 புள்ளிகளுடன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் 2ம் இடம் இடத்துக்கு சரிந்தார். பாகிஸ்தான் வீராங்கனை சடிலா இக்பால், 732 புள்ளிகளுடன், ஒரு நிலை சரிந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தவிர, இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன் 5, தென் ஆப்ரிக்காவின் நொன்குலுலேகோ எம்லாபா 6, ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வேராம் 7, இங்கிலாந்தின் சார்லி டீன் 8, வெஸ்ட் இண்டீசின் அஃபி ஃபெட்சர் 9, பாகிஸ்தானின் நாஷ்ரா சுந்து 10ம் இடங்களை பிடித்துள்ளனர். இந்திய வீராங்கனைகளில் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, 5 நிலைகள் உயர்ந்து 36ம் இடத்துக்கும், ஸ்ரீசரணி 19 நிலைகள் உயர்ந்து 69ம் இடத்துக்கும் உயர்ந்துள்ளனர்.

Tags : ICC Women's T20 ,Deepti Sharma ,Dubai ,ICC ,Women's T20 ,T20I ,Sri Lanka Women ,India ,
× RELATED இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20...