சா பாலோ: பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர், வரும் 2026ல் நடக்கவுள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் ஆட அதீத ஆர்வத்தில் உள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தால், பிரேசில் அணி, உலகக் கோப்பை போட்டியில் மோதும் அணிகளில் ஒன்றாக தேர்வானது.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிக்காக ஆடும் பிரேசில் அணியில் இடம்பெறும் நோக்கில், நெய்மர், தனது இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலை, அவர் இடம்பெற்றுள்ள சான்டோஸ் கிளப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
