இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான சத்தத்தில் இருந்து மாறுதல் ஒலியில் ஒலிக்கப்படும். குறிப்பாக காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவர். எனினும் பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெல் அடித்தவுடன் வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
The post தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது ‘வாட்டர் பெல்’ திட்டம் : தண்ணீர் குடிக்க தினமும் 3 இடைவேளை!! appeared first on Dinakaran.
