இவ்விவகாரம் ஒரு அரசியல் புயலை கிளப்பியதாலும், ஆளும் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாளும் 5-ம் வகுப்பு வரை 2-வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற முடிவை மகாராஷ்டிர அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இணைந்து போராட்டம் அறிவித்தனர். போராட்ட அறிவிப்பு காரணமாகவே மும்மொழிக்கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என முதல்வர் ஃபட்னாவிஸ் அறிவித்தார். மும்மொழிக் கொள்கையை தேசிய ஒற்றுமைக்கான பிரச்சினையாக பாஜக பார்க்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலம் கற்க விரும்புகிறார்கள்.
இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை 3-வது மொழியாக தேர்வு செய்யலாம் என ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழையோ, மலையாளத்தையோ கற்பிக்க வாய்ப்பில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் கற்பிக்கும் வாய்ப்பை எந்த மாநிலமும் வழங்க முடியாது. எனவே நாடு முழுவதும் உள்ள மக்கள் விருப்பங்களின் அடிப்படையில் ஒன்றிய பாஜக அரசு மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மும்மொழிக் கொள்கையின்படி பீகாரில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு கற்க வாய்ப்பில்லை : தி இந்து appeared first on Dinakaran.
