வாழ்த்து சொற்கள் மேலும் மகிழ்வு முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி

சென்னை: ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘உலகளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினை பெற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!

மொழி – தேச எல்லைகளை கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது என தெரிவித்துள்ளார்.இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தனது, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

The post வாழ்த்து சொற்கள் மேலும் மகிழ்வு முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: