அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த இயக்குண்டுகள் தவறுதலாக அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் தலையில் பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூடு காரணமாக சித்தாமூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விளாங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் நரிக்குறவர் சரத்குமார் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் விலங்கை சுட்டது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் என இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
The post மதுராந்தகம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்..!! appeared first on Dinakaran.
