சென்னை: சென்னை வானகரம் அருகே டாரஸ் லாரி மோதியதில் கேரவன் வாகன ஓட்டுநர் உயிரிழந்தார். புளியம்பேட்டில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சிவகங்கையை சேர்ந்த சேதுபதி (28) மீது லாரி ஏறியது. விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டாரஸ் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.